பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் நிலை கவலைக்கிடம்.

உலகம் . August, 21 2020

news-details

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் நிலை கவலைக்கிடம்.

இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 14ம் திகதியன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம். ஜி. எம். மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி சிகிக்சை செய்யப்பட்டு ஒருசில நாட்களில் குணமாகிவிடுவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் அவருக்கு செயற்கைச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டார்.
40,000 பாடல்களுக்கு மேல் (முக்கியமாக தமிழில் அதிகம்) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பாடிய பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
'' பாலு சீக்கிரம் எழுந்து வா'' என்று உருக்கமாக இசையுலகின் ஜாம்பவான் இசையமைப்பாளர் இளையராஜா காணொலி பதிவின் மூலம் வேண்டிக்கொண்டார். அதுமட்டுமின்றி திரையுலகின் பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், பத்மஸ்ரீ கமலகாசன், இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான், பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பிரபலங்கள் அவர் பூரணநலன் வேண்டிப் பிரார்த்தனை செய்யுமாறு இணைந்து வேண்டினர். இதேவேளையில், பல்லாயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்காகப் பிரார்த்தனை வேண்டுதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.