சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்

உலகம் . January, 01 2019

news-details

சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும் குழந்தைகளின் சீருடை அதிநவீன மயமாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் அணியும் ஜாக்கெட்டில் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பள்ளியில் நுழைந்தவுடன் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவி புரியும்.

மேலும் பள்ளியில் இருந்து குழந்தைகள் மாயமானாலோ அல்லது வெளியேறினாலோ வகுப்பறையில் அலாரம் அடிக்கும். அதன் மூலம் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது குழந்தைகள் தூங்கினால் கூட அலாரம் அடிக்கும்.

மேலும் குழந்தைகள் ஆள்மாறாட்டம் செய்து பள்ளிக்குள் நுழைய முடியாத படி முக அடையாளத்தை ஸ்கேன் செய்யும் வசதியும் மைக்ரோ-சிப்பில் இடம் பெற்றுள்ளது.

இவை தவிரசெல்போனில் உள்ள ‘ஆப்’ மூலம் பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும். இதன் காரணமாக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகைப்பதிவேடு அதிகரித்துள்ளது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளன.

இதற்கு சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.