அமெரிக்காவின் அடுத்த துணை ஜனாதிபதியாகும் இந்திய தமிழ் வம்சாவளி வந்த கமலா ஹாரிஸ் .

உலகம் . August, 14 2020

news-details

அமெரிக்காவின் அடுத்த துணை ஜனாதிபதியாகும் இந்திய தமிழ் வம்சாவளி வந்த கமலா ஹாரிஸ் .

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம். அவரை எதிர்த்துப் போட்டியிட இருப்பவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உபஜனாதிபதி ஜோ பைடென் அவர்கள். இந்தமுறை அவருக்குத் தான் ஜனாதிபதியாகும் வெற்றிவாய்ப்புகள் அதிகம் என்று எதிர்வு கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடென் தனது தெரிவாக துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட் சியைச் சேர்ந்த கலிபோர்னிய செனட்டர் கமலா ஹாரிஸ் அவர்களைத் தெரிவு செய்துள்ளார். இந்தியத் தமிழ் வம்சாவளி வழிவந்த கமலா ஹாரிஸ் தனது இளமைக் கல்வியைக் கனடாவில் மொன்றியலில் ரோஸ்மவுண்ட் உயர் பள்ளியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.