102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனாத் தொற்று .

உலகம் . August, 14 2020

news-details

102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனாத் தொற்று .

உலகில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட நாடு என்று போற்றப்பட்ட நியூசிலாந்து நாட்டில் சரியாக 102 நாட்களுக்குப் பிறகு கொரோனாத் தொற்றுப் பதிவாகியுள்ளது. அந்த நாட்டின் பெரிய மாநகரமான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாநகரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுள்ளது. அங்கு கடந்த 102 நாட்களுக்கு முன்புவரை 1200 தோற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டதுடன் 22 பேர் பலியாகியிருந்தனர். நியூசிலாந்து நாட்டின் அதிபர் ஜெசிந்தா ஆடன் அவர்கள் மிகவும் பொறுப்புடன் கொரோனாத் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பாராட்டுக்குரியவராகத் திகழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே.