உலகை உலுக்கிய அணுகுண்டு இல்லாத மாபெரும் குண்டு வெடிப்புகள்; கதிகலங்கிய லெபனான்.

உலகம் . August, 07 2020

news-details

உலகை உலுக்கிய அணுகுண்டு இல்லாத மாபெரும் குண்டு வெடிப்புகள்;
கதிகலங்கிய லெபனான்.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட்டிலுள்ள துறைமுகத்தில் 2ம் உலகப் போருக்குப் பின் உலகில் எங்குமே நடைபெற்றிராத பாரிய குண்டுவெடிப்பு உலகையே உலுக்கியுள்ளது. வரலாறு காணாத இந்தப் பாரிய குண்டுவெடிப்பு அனர்த்தங்களால் இதுவரை 135 பேர் பலியானதாகவும் 4,000 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அங்குள்ள வைத்தியசாலையில் காயமடைத்தோரை அனுமதிக்க இடமில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்தில் இருந்த கிடங்கொன்றில் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் நிறையுள்ள அமோனியம் நைட்ரேட் என்ற இரசாயனப் பொருள் காரணமாகவே இப் பாரிய வெடிப்பு நிகழ்ந்ததாக, லெபனான் நாட்டின் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார். தற்போது லெபனானில் 2 வாரங்களுக்கு நாடுதழுவிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.