ரஷியாவின் அதிரடிச் செய்தி; கொரோனாவுக்குத் தடுப்பூசி தயார்

உலகம் . August, 04 2020

news-details

ரஷியாவின் அதிரடிச் செய்தி; கொரோனாவுக்குத் தடுப்பூசி தயார்

ஒஸ்க்ப்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனாத் தடுப்பு மருந்து தயார் என்ற செய்தியைத் தொடர்ந்து தற்போது ரஷ்ஷிய வரும் ஆக்டோபர் மாதத்தில் தாம் கண்டுபிடித்த கொரோனாத் தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தத் தயாராகவுள்ளதாக அதிரடி அறிவிப்பொன்றைச் செய்திருக்கின்றது. இந்தத் தகவலை ரஷ்ஷிய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். முதலில் மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் பின்னர் ஆசிரியர்கள் எனத் தொடர்ந்து மற்றய துறையினருக்கும் மக்களுக்கும் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.