கொரோனாத் தடுப்பு மருந்தும் சந்தேகங்களும்.

உலகம் . July, 28 2020

news-details

கொரோனாத் தடுப்பு மருந்தும் சந்தேகங்களும்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனாத் தொற்றுகளால் உலக நாடுகள் முடங்கிப்போன நிலையில் இந்தக் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஆவலோடு ஈடுபட்டன. இதில் உலகின் முன்னோடி பல்கலைக்கழகமான ஒக்ஸ்ப்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மனிதர்களிடம் செலுத்தி சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின் படி உலகம் முழுவதும் 25 கொரோனாத் தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையில் உள்ளன.
இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான இந்தத் தடுப்பு மருந்து குறித்த உண்மைத் தன்மைகள் என்னவென்று வெளியான செய்திகளைப் பார்ப்போம்.
இந்தத் தடுப்பு மருந்து கொரோனா வைரஸை அடையாளம் கண்டு போராடுவதற்கும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன .
இது பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அறிவியல் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தத் தடுப்பு மருந்துகள் பரவலான பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப் படுமுன்னர் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மருத்தைக் கண்டுபிடிப்பதில் சந்தைப் படுத்துவதிலும் போட்டாபோட்டி நடைபெற்று வரும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பு மருந்து பற்றியும் எதிர்மறையான கேள்விகள் ஏற்படுவதும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதும் தவிர்க்க முடியாததாகவுள்ளது.