அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம்; இரு நாடுகளும் அதிரடி நடவடிக்கைகள்.

உலகம் . July, 26 2020

news-details

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம்;
இரு நாடுகளும் அதிரடி நடவடிக்கைகள்.

அமெரிக்காவில் உள்ள சீனத் தூதுவர் அலுவலகத்தை 48 மணி நேரத்துக்குள் மூடுமாறும் பணியாளர்களை நாட் டைவிட்டு வெளியேறுமாறும் கடந்த 22/7/2020 அன்று அமெரிக்கா உத்தரவிட்டது .சீன அரசின் இரகசிய படைத்துறையும் அவற்றின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையவளையத்தினுடாக தாக்குதல் செய்து கோவிட் -19 தடுப்பூசிகளைத் தயாரிக்கும் ஆய்வகங்களில் தகவல்களை திருட முற்பட்ட செயலை அமெரிக்க நீதித்துறை கண்டித்தது . இந்த செயலினால் சீற்றமடைந்த அமெரிக்க அதிபர், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகங்கள் எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்று அறிவித்தார். அதே நேரத்தில் சீனத் தூதரக வளாகத்தில் எக்கசெக்கமான ஆவணங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணையாத திருட்டு சம்பந்தமான ஆவணங்கள் தான் எரியூட்டப்படிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது . இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்தது. அத்துடன் அமெரிக்கா தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம் கோரியது. இனி எக்காரணம் கொண்டும் சீனாவுடன் உறவைத் தொடரமுடியாது என்று வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ தெரிவித்தார்.
அவமானத்தால் தலைகுனித்த சீனா, சீனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுமாறு பதிலடி கொடுத்துள்ளது.