அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஆட்டங்காண வைத்த ரஷியாவின் செயல்; விண்வெளி ஆயுதப் பாவனை,

உலகம் . July, 26 2020

news-details

அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஆட்டங்காண வைத்த ரஷியாவின் செயல்; விண்வெளி ஆயுதப் பாவனை,

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்காவையும் பிரிட்டனையும் அக்சுறுத்தும் வகையான ஆத்திரமூட்டும் செயலில் இன்னொரு வல்லரசான ரஷியா இறங்கியுள்ளது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களைச் சுட்டு வீழ்த்தும் முயற்சியில் ரஷியா இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திரு ப்பதாக அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பும் இப்படியான முயற்சி மேற்கொள்ளப்பட்டத்தாக தெரிவிக்கப்படுகிறது. விண்வெளியைப் பாதுகாக்கவேண்டுமென்றும் அமைதியாக வைத்திருக்க வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் செயல் இது என்று கண்டிக்கப்படுகிறது. இத்தகைய செயல்கள் நடைபெறலாம் என்பதை முன்கூட்டியே அனுமானித்து அமெரிக்கா பிரான்சுடன் சேர்ந்து விண்வெளி இராணுவம் ஒன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் சுற்றும் செயற்கைக் கோள்கள் மூலமே பூமியில் தொழில்நுட்பங்களின் செயப்பாடுகளும் , விமானங்கள் பறத்தல், தொலைபேசி சேவைகள், காலநிலை கண்காணிப்பு கணிப்பு என்பன நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.