சூடானின் முன்னாள் சர்வாதிகார அதிபருக்கு மரண தண்டணை கிடைக்கவிருக்கிறது

உலகம் . July, 24 2020

news-details

சூடானின் முன்னாள் சர்வாதிகார அதிபருக்கு மரண தண்டணை கிடைக்கவிருக்கிறது

சூடானின் முன்னாள் சர்வாதிகார அதிபர் ஓமர் அல் பசீர் , 1989ம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் சூடான் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகார ஆட்சி செய்தது மட்டுமல்ல 3 லட்ஷம் மக்களைக் கொன்று குவித்தான். அத்துடன் 25 லட்ஷம் மக்கள் விரட்டியடிக்கப் பட்டனர். அதுமட்டுமன்றி சூடானின் எண்ணெய்க் கிணறுகளை சவூதி அரேபியாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் அந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்ததுடன் தன்னுடைய அதிபர் பதவிக்கான சம்பளமாக லட்ஷக்கணக்கான பணத்தை லஞ்சமாகப் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தான் . சென்ற ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சி இவனது ஆட்சி கவிழ்க்கப்பட்டு இவன் சிறையில் அடைக்கப் பட்டான். தற்போது இவனது ஊழல் ஆட்சி மற்றும் படுகொலைகளுக்கு எதிரான வழக்கு சூடான் நாட்டு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சர்வதேச நீதிமன்றத்தில் இவனது மனிதப் படுகொலைகளுக்கான வழக்கு தொடுக்கப் படுவதற்கு முன்பாகவே சூடான் நாட்டு உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் மூலம் இவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.