மேலும் ஒரு covid -19 தடுப்பு மருந்து பரிசோதனையில். இதுவரை 150 மருந்துகள் கண்டுபிடிப்பு.

உலகம் . July, 22 2020

news-details

மேலும் ஒரு covid -19 தடுப்பு மருந்து பரிசோதனையில். இதுவரை 150 மருந்துகள் கண்டுபிடிப்பு.

லண்டனிலுள்ள மிகப் பெரிய மருந்து நிறுவனமான AstraZeneca வும் oxford பல்கலைக் கழகமும் கண்டுபிடித்த, கொரோனா(covid -19) வைரசிக்கான தடுப்பு மருந்தை முதல் கட்டப் பரிசோதனையாக 18 வயது முதல் 55 வயதிற்கிடையிலான 1000 பேருக்கு மேல் செலுத்தி வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற தொழில்நுட்பத்தினுடாக சீனாவிலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது . இதுவரை உலகில் பல நாடுகளிலும் 150 வகையான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றுகளும் மரணங்களும் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் நாடுகளும் மருந்து நிறுவனங்களும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. எந்த நாட்டின் தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறதோ அந்த நாடுதான் உலகில் வல்லரசாகவோ பணக்கார நாடாகவோ மாறும் வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது.