இரண்டாவது நாளாக கலிபோர்னியாவில் அதியுச்ச தொற்றுகள். இன்று அமெரிக்காவில் மரணங்கள் 900 ற்கு மேல் . பிரேசில் , மெக்ஸிகோ, இந்தியாவிலும் அதிக பலி

உலகம் . July, 17 2020

news-details

இரண்டாவது நாளாக கலிபோர்னியாவில் அதியுச்ச தொற்றுகள்.
இன்று அமெரிக்காவில் மரணங்கள் 900 ற்கு மேல் . பிரேசில் , மெக்ஸிகோ, இந்தியாவிலும் அதிக பலி

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டாவது நாளாக கொரோனாத் தொற்றுகளும் மரணங்களும் இரண்டாவது நாளாக அதி உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு கடந்த 14/7/2020 அன்றும் 15/7/2020 அன்றும் இரண்டாவது நாளாக சராசரி 11,000 பேர்வரை கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் 140 பேர் மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15/7/2020 அன்று டெக்சாஸ் மாநிலத்தில் 10,800 பேரும் புளோரிடா மாநிலத்தில் 10,181 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் பிரேசிலில் 1200 மேற்பட்ட மரணங்களும் , மெக்ஸிகோவில் 800 ற்கு மேற்பட்ட மரணங்களும், இந்தியாவில் 600 ற்கு மேற்பட்ட மரணங்களும் பதிவாகியுள்ளன.