என்ன நடக்கிறது? கொரோனா வைரஸ் உலக நடப்புகள்.

உலகம் . July, 13 2020

news-details

என்ன நடக்கிறது? கொரோனா வைரஸ் உலக நடப்புகள்.

அமெரிக்காவில் 11/7/2020 அன்று ஒரேநாளில் மட்டும் 60,000 ற்கு மேற்பட்ட கொரோனாத் தொற்றுகள் பதிவு. கடந்த சில நாட்களாக மீண்டும் அமெரிக்காவில் எகிறும் தொற்றுகளால் புதிய பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் 137,403 அமெரிக்கர்களைப் பலிகொண்டுள்ளது. உலக அளவில் 500,000 ற்கு அதிகமான மக்களைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட நோய்த்தொற்றாளர்கள் 3,355,646 ஆகும்.
இதுவரை நாளும் தான் முகக்கவசம் அணிய மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் இன்று முதல் முறையாக முகக்கவசம் அணிந்து மக்கள் முன் தோன்றினார். அமெரிக்காவில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோதே அவர் முகக்கவசம் அணிந்து சென்றார்.

இதேவேளையில் பிரேசில் நாட்டின் அதிபரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்பதும் அவரும் டொனால்ட் ட்ரம் போல் கொரோனா வைரஸ் பற்றிய நடவடிக்கைகளை அலட்ச்சியம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கவை அடுத்து கொரோனாத் தொற்றில் அதிக மக்களைக் கொண்ட நாடு இதுவாகும், இங்கு இதுவரை தோற்றாளர்கள் 1,840,812 என்பதும் பலியானோர் தொகை 71,492 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் கொரோனாத் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும் நிலையில் மிகவும் உலக பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகை ஐஸ்வர்யாராய் யின் கணவருமான அபிஷேக் பச்சனும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி இருவரும் ஒரே வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றவது இடத்தில் இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்றாளர்கள் 850.358 என்பதும் பலியானோர் 22, 687 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்றுகள் இரட்டிப்பாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கனடா கொரோனாத் தொற்றுகளைக் கட்டுப்படுத்தவும் நோயாளர்களுக்கான உபகரணங்களை துரித கதியில் கொள்முதல் செய்வதில் முனைப்புடன் செய்யப்பட்டதும் பாராட்டுக்குரியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கூறினார். கனடாவில் இதுவரை 107.346 வைரஸ் தொற்ரளர்களும் 8,765 பலியான தொகையும் பதியப்பட்டுள்ளது.