அமெரிக்காவில் சுதந்திர தினத்தை அமெரிக்கர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. பெரும்பாலான கொண்டாட்டங்கள் இரத்து . மீண்டும் 40 மாநிலங்களில் முடக்க நிலை அறிவிப்பு.கனடாவிலும் தொடரும் தொற்று அபாயம் .

உலகம் . July, 07 2020

news-details

அமெரிக்காவில் சுதந்திர தினத்தை அமெரிக்கர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை. பெரும்பாலான கொண்டாட்டங்கள் இரத்து . மீண்டும் 40 மாநிலங்களில் முடக்க நிலை அறிவிப்பு.கனடாவிலும் தொடரும் தொற்று அபாயம் .

கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் தலா 50, 000 தொற்றுகளாக எகிறும் கொரோனா. மேலும் பிரேசில் மற்றும் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கில் எகிறும் தொற்றுகள்.

உலக சுகாதார நிறுவனம் இன்னும் கொரோனா இரண்டாவது அலை தொடங்கவில்லை என்று எச்சரிக்கும் நிலையில் அமெரிக்காவில் பல மாநிலங்களில் பொது முடக்கத்தை விலக்கியவுடன் தொற்றுகள் ஆயிரக்கணக்கில் பதிவாகியிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் 40 மாநிலங்களில் மீண்டும் பொது முடக்கத்தை அமூல் படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதே போல் பிரேசிலில் கடந்த சில நாட்களாக சராசரி 40,000 பேர் வீதமும் இந்தியாவில் 20,000 பேர் வீதமாகவும் தொற்றுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதே வேளையில் உலகின் ஏனைய நாடுகளிலும் தொற்றுகள் அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் முடக்க நிலைக்குத் திரும்பும் நிலையில் உள்ளன. கனடாவிலும் மீண்டும் தொற்றுகள் அதிகரிக்கும் நிலை காரணமாக பொது முடக்கத் தளர்வுகள் பிற்போடப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஒரு தொற்றும் பதிவாகாத நியூ-போவுண்ட்லண்ட் மாநிலத்தில் புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சி தருவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.