கொரோனா வைரஸ் , உலக நாடுகள் நிலைவரம் ;அதிரடி மாற்றங்கள்; மீண்டும் ஊரடங்கு மூடுதல் நிலைக்குத் திரும்பும் நகரங்கள்.

உலகம் . July, 01 2020

news-details

கொரோனா வைரஸ் , உலக நாடுகள் நிலைவரம் ;அதிரடி மாற்றங்கள்;
மீண்டும் ஊரடங்கு மூடுதல் நிலைக்குத் திரும்பும் நகரங்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் வியாபார தொழிற்துறை நிறுவங்களை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளன. அமெரிக்காவில் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் அதிகமான கோரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் முடக்கப்பட்ட வியாபார தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கும் முடிவை பிற்போட்டுள்ளன. கலிபோனியா, ரக்சாஸ் மாநிலங்களிலும் லாஸ் ஏஞ்சல் நகரிலும் அபரிமிதமான நோய்த் தோற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் மெல்போர்ன் மாநிலத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக 12ற்கு மேற்பட்ட நகரங்களை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு முடக்கும் முடிவை நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பிரிட்டனிலும் கட்டுக்கடங்காத நோய் பரவலை தடுக்கும் முகமாக மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் அமூல் படுத்தி வருகின்றனர். அத்தியாவசியமற்ற கடைகள் தவிர மற்ற எல்லா வியாபாரத் தலங்களை மீண்டும் மூடவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.