உலகம் . June, 29 2020
கொரோனா வைரஸ்சுக்கு பிறகு முழுமையாகக் குணமடையாத ஆபத்து ; நீண்ட கால சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம். உடலுறுப்புகளை பாதிக்க கூடிய நிலை ஏற்படலாம்.-
விஞ்ஞரனிகள் எச்சரிக்கை.
கோரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடிகள் மிகவும் நீண்டகாலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞரனிக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் குணமடைந்தனர் என்று விடுபட்டாலும் அது முழுமையாக குணமடைந்தார் என்று அர்த்தமில்லை என்றும் மருத்துவத் துறைக்குச் சவாலாக பல நீடித்த சவால்களை எதிர்கொள்ள நேரிடுமென்றும் தொ ற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்றின் போது உடலின் சில உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு எனவும் அது நீண்ட காலச் சிக்கல்களை உருவாக்கலாம் என்றும் கலிபோனியாவின் ஜா ஜொல்லா ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தின்(Scripps Research Translational Institute in La Jolla, California.) வைத்திய அதிகாரி Dr. Eric Topol அவர்கள் தெரிவித்துள்ளார்.