சீனாவுக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகள்; உறவைத் துண்டிக்கும் நிலையில் அமெரிக்கா; இந்தியாவுடனும் முறுகல்.

உலகம் . June, 22 2020

news-details

சீனாவுக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகள்; உறவைத் துண்டிக்கும் நிலையில் அமெரிக்கா; இந்தியாவுடனும் முறுகல்.

அணமைக் காலமாக சீனாவின் நடவடிக்கைகள் குறித்து உலகநாடுகள் அதிருப்தியில் உள்ளன. கொரோனா தொடர்பான உண்மைத் தன்மையை முறையாக அறிவிக்காதது, உலக வர்த்தக சந்தையை பலவீனப்படுத்தி அதனைத் தனக்கு சாதகமாக திருப்ப முயசிப்பது போன்ற விஷயங்களில் உலக நாடுகள் சீனாவை எதிர்க்கின்றன. ஏற்கனவே அமெரிக்கா சீனாவுடனான உறவைத் துண்டிக்கும் நிலையில் உள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பியன் யூனியனும் சீனாவை எதிர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சீனா உலக வர்த்தக வல்லரசு பலத்தை தன் கையில் கொண்டுவர முயற்சிப்பது அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. மேலும் இந்திய எல்லைகளில் அத்துமீறி நுழைந்து, சீண்டி 20 இந்திய இராணுவ வீரர்களைக் கொன்றிருக்கிறது. பொறுத்தது போதும் இனி ஒரு நடவடிக்கை முன்னேற்றத்தை சீனா மேற்கொண்டால் பதிலடி கொடுப்பது தவிர்க்க முடியாது என்று இந்தியா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவுக்கு கரம் நீட்ட அமெரிக்கா தயாராகவுள்ளது.