மரண தண்டனையை எதிர்கொள்ளும் கனேடியர் ஒருவர் அமெரிக்காவில் கைது.

உலகம் . June, 21 2020

news-details

மரண தண்டனையை எதிர்கொள்ளும் கனேடியர் ஒருவர் அமெரிக்காவில் கைது.

2008 இல் இந்தியாவில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் (LOS ANGELES) இல் வைத்து கைது செய்யப்பட்டார் . முன்னாள் சிக்காகோ தொழிலதிபரான இவர் இந்திய பயங்கரவாத குழுவினருக்கு உதவினார் என்றும் , 160 பேரைக் கொன்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் இந்தியாவில் மரண தண்டனையை எதிகொள்ளும் ஒரு குற்றவாளி என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் பாகிஸ்தானில் பிறந்த கனடிய குடியுரிமை பெற்றவர் என்றும் இவரது பெயர் தகவுர் ரானா(TAHAWWUR RANA) என்றும் தெரிவிக்கப் படுகிறது. இந்தியாவில் நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒரு 9/11 போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.