அமெரிக்க அதிபருக்கு ஆப்பு. வெளிவந்து கொண்டிருக்கும் தப்புத்தாளங்கள்; மீண்டும் அதிபராக முடியாது.

உலகம் . June, 19 2020

news-details

அமெரிக்க அதிபருக்கு ஆப்பு. வெளிவந்து கொண்டிருக்கும் தப்புத்தாளங்கள்; மீண்டும் அதிபராக முடியாது.

அமெரிக்க அதிபரின் அரசியல் வாழ்க்கையை தவிடிபொடியாக்கும் வகையில் அவருக்கு எதிராகப் பேரிடியாக இறங்கியிருக்கிறது மேலும் சில பிரச்சனைகள். அண்மையில் கறுப்பினத்தவர்களது கோரிக்கைகளை அவமதித்து நடந்த வகையில், அவர் மீண்டும் அதிபராகும் வாய்ப்புக் குறைவாக கணிக்கப்பட்டது . தற்போது அவருக்கெதிராக மேலும் இரண்டு பிரச்சனைகள் கிளம்பியிருக்கின்றன . ஒன்று அவரது அதிகாரியாக இருந்த Jhon Bolton என்பவர் வெள்ளை மாளிகை விவகாரங்கள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தின் மூலம் டொனால்ட் ட்ரம் செய்த பல தவறான அதிகார நடவடிக்கைகள் வெளிவரவிருக்கின்றன . இந்த நூல் வெளியாவதைத் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரத்தின் மூலம் டொனால்ட் ட்ரம் முயன்று வருகிறார். இருந்தாலும் இந்நூல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இரண்டாவது, இவர் செய்த திருகுதாளங்கள் பற்றி அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் எழுதிய இன்னொரு நூல் வெளிவரவுள்ளது. இவையெல்லாம் அவரது அரசியல் வாழ்க்கையையை அஸ்தமிக்கச் செய்யும் முயற்சியாகவே உள்ளன.