கொரோனாத் தடுப்பூசியை தத்தம் நாட்டு மக்களுக்கு ஒதுக்குவதில் பணக்கார நாடுகளிடையே போட்டாப்போட்டி.

உலகம் . June, 19 2020

news-details

கொரோனாத் தடுப்பூசியை தத்தம் நாட்டு மக்களுக்கு ஒதுக்குவதில் பணக்கார நாடுகளிடையே போட்டாப்போட்டி.

தற்போது உலக நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதிலும் பரிசோதனை செய்வதிலும் தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகளிடையே போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது , கொரோனா வைரஸ்க்காக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை தத்தம் நாட்டு மக்களுக்காக கொள்வனவு செய்வதில் - ஒதுக்கி வைப்பதில் போட்டாப்போட்டி தன்மையை எதிர்கொண்டுள்ளன. இதற்கேற்ற வகையில் கொள்வனவு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களில் மாற்றங்களைச் செய்து இரகசிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருவதாக அறியப்படுகிறது.