400,000 மரணங்களை எட்டிய கொரோனா நிலவரம். வேகமாக முன்னேறும் இந்தியா.

உலகம் . June, 08 2020

news-details

400,000 மரணங்களை எட்டிய கொரோனா நிலவரம். வேகமாக முன்னேறும் இந்தியா.

உலகளாவிய கொரோனா மரணங்கள் 400,000 ஐ எட்டிவிட்டது. இது தொடரும் சீரணிக்க முடியாத அவல நிலையாகும். தற்போது பிரேசில் நாட்டில் பொது சுகாதார விதிமுறைகளை அரசும் மக்களும் முறையாகக் கடைபிடிக்காத காரணத்தால் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக மரணங்கள் பதிவாகின்ற நாடுகளின் வரிசைக்கு முன்னேறி வருகின்றது.

உலகெங்கிலும் 6.9 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக ஜோன் கொப்கின் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதே வேளையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகமான நோய்த் தொற்றுகளும் மரணங்களும் பதிவாகி வருகின்றன. மார்ச் மாத இறுதியில் நோய்த்தொற்றில் 41 வைத்து இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஆறாவது இடத்துக்கு வந்து விட்டது என்பது அதிர்ச்சி தரும் நிலைமையாகும்.