அமெரிக்க மக்களை அடக்க அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இராணுவ அமைச்சர் மறுப்பு.

உலகம் . June, 07 2020

news-details

அமெரிக்க மக்களை அடக்க அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு இராணுவ அமைச்சர் மறுப்பு.

அமெரிக்காவில் தற்போது நடைபெற் றுவரும் கறுப்பினத்தவருக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை அடக்க அமெரிக்க இராணுவத்தைக் களமிறக்குவது தான் சரியான வழி என்று அமெரிக்க அதிபர் டொனால் ட்ரோம்ப் அறிவித்தார். அதனை அமெரிக்காவின் இராணுவ அமைச்சர் நிராகரித்தார். அவர் அமெரிக்க அதிபரின் முடிவை நிராகரித்ததற்குக் காரணம் இராணுவத்தைப் பயன்படுத்தவேண்டிய தருணம் இதுவல்ல என்றார் . அதே வேளை முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் அதிபரின் இந்த முடிவைக் கண்டித்ததுடன் அமெரிக்க அதிபர்களின் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான அதிபரைத் தான் காணவில்லை என்றும் அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக மக்களைப் பிளவுபடுத்தி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் .