அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் வெள்ளைமாளிகைப் பதுங்கு குழியில் ; வெள்ளைமாளிகையைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள்.

உலகம் . June, 03 2020

news-details

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் வெள்ளைமாளிகைப் பதுங்கு குழியில் ; வெள்ளைமாளிகையைச் சூழ்ந்த போராட்டக்காரர்கள்.

Sunday: கடந்த வாரம் மினியாபொலிஸ் மாநிலத்தில் வெள்ளையின போலீஸ்காரன் ஒரு கறுப்பினத்தவரைக் கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொன்றதைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக அமெரிக்கா முழுவதும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ளைமாளிகையைச் சூழ்ந்த போராட்டக்காரர்களால் அமெரிக்க அதிபருக்கு ஆபத்து எனக் கருதிய வெள்ளைமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் அதிபரையும் அவரது குடும்பத்தினரையும் வெள்ளைமாளிகைப் பதுங்கு குழியில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அமெரிக்க முழுவதும் கறுப்பினத்தவருக்கு ஆதரவாக நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.