அமெரிக்காவில் கொரோனாவைப் பின்தள்ளிய இன வன்முறைகள்; வெள்ளையர் கறுப்பர் இனத்துவேஷத்தின் வெளிப்பாடு. கலவரத்தில் ஈடுபட்ட 1400 கைது .

உலகம் . May, 31 2020

news-details

அமெரிக்காவில் கொரோனாவைப் பின்தள்ளிய இன வன்முறைகள்;
வெள்ளையர் கறுப்பர் இனத்துவேஷத்தின் வெளிப்பாடு. கலவரத்தில் ஈடுபட்ட 1400 கைது .

30/5/2020: அமெரிக்க மினியாபொலிஸ் மாநிலத்தில் 41 வயதுடைய ஒரு கறுப்பினத்தவர் ஒரு வெள்ளையர் போலிக்காரனால் கழுத்து நெரிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் இறந்து விட்டார். இதன் எதிரொலியாக அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே கலவரங்கள் மூண்டன. இதில் வாகனங்கள் கடைகள் சேதமாக்கப்பட்டும் கொளுத்தப்பட்டும் பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் முக்கியமாக ஒரு போலீஸ் நிலையமும் மதுபானக் கடையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கர்களின் இனத்துவேஷத்தின் வெளிப்பாடுகள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமா அதிபராக வந்த பின்பும் கூட அமெரிக்கர்களின் இனத் துவேசம் முடிவுக்கு வந்தபாடில்லை. எல்லாவற்றிலும் முதலாவது என்று சொல்கின்ற அமெரிக்கா கொரோனா மற்றும் இனத்துவேசத்திலும் பின்னிற்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இக் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் 1,400 பேர் 17 நகரங்களில் கைது செய்யப்டுள்ளனர் என அமெரிக்க போலீஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப் பொலிஸார் திணறுகின்றனர். நிலைமை கைமீறிப் போகும் பட்சத்தில் இராணுவத்தை கொண்டு கலவரங்களை அடக்கும் முயற்சியில் பாதுகாப்புத்துறை இறங்கவிருக்கிறது. கொலை செய்யப்பட்ட கறுப்பினத்தவருக்கு சார்பாக கொலைக்கு காரணமான போலீஸ் காரன்மீது கொலை செய்ததற்கான வழக்கு பதிய பட்டிருக்கிறது. இந்தப் போலிக்காரனின் மனைவி இப்படிப்பட்ட ஒரு கொடியவனுடன் இனி வாழ மாட்டேன் என்று விவாகரத்து கோரியுள்ளார்.