அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதி. சீனா பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

உலகம் . May, 05 2020

news-details

அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதி. சீனா பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

BY WILL WEISSERT THE ASSOCIATED PRESS MAY 3, 2020 5:27 PM
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை சீனா மறைத்துவிட்டது என்றும் (WHO) உலக சுகாதார நிறுவனமும் சீனாவுடன் சேர்ந்து தவறு செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அடிக்கடி குற்றம் சாட்டி வருகின்றார். அது மட்டுமன்றி சீனா கொரோனா வைரஸ் விடயத்தில் வேண்டுமென்றே தவறு செய்திருந்தால் சீனாவைத் தான் சும்மா விடமாட்டேன் எனவும் எச்சரித்திருந்தார். மேலும் அமெரிக்கா உளவுத்துறை மூலம் இரகசிய விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ வும் சீனாவை ஏச்சரித்துள்ளார். சீனா திட்டமிட்டு இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே(1/5/2020) அன்றைய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 5 பக்க அறிக்கையின்படி சீனாதான் இப்பாரதூரமான தவறைச் செய்தது என்பது உறுதியாகியுள்ளது என்றும் சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார்.