WHO எச்சரிக்கை : கொரோனா அபாயத்தின் மோசமான இன்னும் தொடங்கவில்லை

உலகம் . April, 24 2020

news-details

WHO எச்சரிக்கை : கொரோனா அபாயத்தின் மோசமான இன்னும் தொடங்கவில்லை

உலக நாடுகளில் ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு அந்தந்த நாடுகள் ஆலோசிக்கின்ற இந்த வேளையில் கொரோனா வைரஸ்சின் படுமோசமான கட்டம் இன்னும் தொடங்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) உலக நாடுகளை எச்சரித்துள்ளது. உலக நாடுகள் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்றும் அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளது. இன்னும் சிலநாடுகள் இதன் பாதிப்பை முறையாக எதிர்கொள்ளவில்லை என்றும் தற்பொழுதுதான் அந்த நாடுகளில் COVID-19 இன் தாக்கம் உருவாகத் தொடங்கியுள்ளதாகவும் WHO இன் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.