தொடர்ந்தும் கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலிகொள்ளும் கொரானா ; மீண்டும் சீனாவில் கொரோனாத் தொற்று ; அதிர்ச்சியூட்டும் செய்திகள்: நியூயோர்க்கின்(New York) இடத்தைப் பிடிக்கும் நிலையில் மோஸ்க்கோ(Mosco)

உலகம் . April, 19 2020

news-details

தொடர்ந்தும் கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலிகொள்ளும் கொரானா ; மீண்டும் சீனாவில் கொரோனாத் தொற்று ; அதிர்ச்சியூட்டும் செய்திகள்: நியூயோர்க்கின்(New York) இடத்தைப் பிடிக்கும் நிலையில் மோஸ்க்கோ(Mosco)

18/4/2020: 14:00H உலகத்தில் இதுவரை கொரோனாவினால் 2,306588 பேர் பாதிக்கப்பட்டும் 158,063பலியாகியும் உள்ளனர். கடந்த 11 நாட்களில் 79,365 உயிர்கள் பலியாகியுள்ளனர். கடந்த மார்ச் 27ம் திகதி வெறும் 24,089 பேராக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 21 நாட்களில் 158,063 ஆக பலி எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது . மீள முடியாத அதிர்ச்சியில் உலக நாடுகள்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2000-2500 ற்கு மேற்பட்ட மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் நியூயோர்க் மாநிலத்தில் தான் அதிகமான தொற்றுகளும் மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது நியுயோர்க்கின் இடத்தைப் பிடிக்கும் நிலையை ரஸ்சியாவின் மோஸ்க்கோ எதிர்நோக்கியுள்ளது. மோஸ்க்கோவில் பத்து நாட்களுக்கு முதல் 8672 நோய்த்தொற்றாளர்களும் 63 பேர் பலியாகியும் நோய்தொற்றில் 19வது இடத்தில் இருந்த ரஷியாவில் இன்று 36,793 நோய்த்தொற்றாளர்களும் 313 பேர் பலியாகியும் தற்போது ரஷியா 11வது இடத்திற்கு வந்துள்ளது. இதே போல் கடந்த எட்டாம் திகதி 19438 தொற்றாளர்களும் 427 மரணங்களுமாக நோய்த்தொற்றில் 13வதாக இருந்த கனடா இன்று 33,137 தோற்றாளர்களும் 1346 மரணங்களுடனும் அதே 13வது இடத்தில் இருக்கிறது.
கொடிய கொரோனாத் தொற்றிலும் மரண உச்சத்திலும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 726,857 பேருக்குத் தொற்றும் 38,200 பேர் பலியாகியும் உள்ளனர்.
இதுவரை இந்தக் கிருமித்தொற்றிலிருந்து உலகம் மீளும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகம் பேரழிவில் இருந்து மீளவும் பாதுகாப்போடு வாழவும் எல்லோரும் ஒருமுகமாக அவரவர் நம்புகிற கடவுளிடம் பிரார்த்தனை, தியானம் செய்வதும், அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து நடப்பதும் ''யாதும் ஊரே யாவரும் கேளீர் ; தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என ஒற்றுமையாக வாழ்வதும் தவிர்க்க முடியாத ஒன்று.