ஒரு லட்சத்தைத் (100,000) எட்டவிருக்கிறது கொரோனா மரணங்கள் .

உலகம் . April, 10 2020

news-details

ஒரு லட்சத்தைத் (100,000) எட்டவிருக்கிறது கொரோனா மரணங்கள் .
மூன்றாம் உலகப் போரைவிட மோசமான பாதிப்பை உலகம் எதிர் கொண்டுள்ளது.

10/4/2020 நடுஇரவு 12:15 வரை உலகில் கொரோனா தொற்று மரணங்கள் 95,735 ஆகவும், பதிக்கப்பட்டோர்1,604.718 ஆகவும் உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய போன்ற வளர்முக நாடுகள் சீனாவையும் மிஞ்சிய பேரவலத்ததைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மிகமிக அதிகமான நோய்த் தொற்றாளர்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. சீனாவில் நோய்(81,907) தொற்றியவர்களை விட 5(ஐந்து) மடங்கிற்கு மேற்பட்டவர்கள் ( 468, 566) அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகமான மக்கள் பலியான நாடு இத்தாலி. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழப்பில் முதலாவது நிலையில் நிற்கும் இத்தாலியைத் துரத்திக்கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 16, 691 பேரை இழந்துள்ளது. தொடர்ந்து ஸ்பெயின்-15,447; பிரான்ஸ்-12,210; பிரிட்டன்-7,978 என்ற அளவில் இந்த நாடுகள் இதுவரை உயிரிழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலைமைகள் மிகவும் மோசமாகக் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து கொண்டிருப்பவையாகவும், பேரதிர்ச்சி அளிப்பவையாகவும் இருக்கின்றன. உலக நாடுகளைத் திண்டாட வைத்துள்ளன. உலக நாடுகளின் பொருளாதாரம் பெரு வீழ்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றன. பெருந்தொகையான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துகொண்டிருக்கின்றனர்.
எதிர்பார்ப்பாக கணிக்கப்பட்ட மூன்றாம் உலகப் போரைவிட மோசமான பாதிப்பை உலகம் எதிர் கொண்டுள்ளது.