உலக நாடுகளின், உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) ஆகியவற்றின் அலட்சியமான நடவடிக்கைப் போக்குகள் தான் இப்பேரழிவுகளுக்குக் காரணமா?

உலகம் . April, 08 2020

news-details

உலக நாடுகளின், உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) ஆகியவற்றின் அலட்சியமான நடவடிக்கைப் போக்குகள் தான் இப்பேரழிவுகளுக்குக் காரணமா?

உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) குழப்பமான தகவல்கள் உலக நாட்டு மக்களைத் அவலக் குழியில் தள்ளியுள்ளது.

1) முதலில் Corona Virus(COVID-19) மனிதர்களிடம் இருந்து நேரடியாகப் பரவாது நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்தார்கள். நோயாளியின் தும்மல் இருமல் மூலம் வெளியேறும் கிருமி தொடுபரப்பில் தெறித்து அவ்விடத்தைப் பிறர் தொடும்போது தான் பரவுகிறது என்றார்கள். உலக சுகாதார நிறுவனம்(WHO) இந்த கிருமி ஆதிக்கம் பற்றிய உண்மைத் தன்மைகளை மறைத்து விட் டதா? அல்லது உலக நாடுகளை எச்சரிக்கவோ மக்களைப் பாதுகாக்கவோ தவறிவிட்டது.

2) பின்னர் கட்டுக்கடங்காமல் நோய்த்தொற்று அதிகமாகி மக்கள் கொத்துகொத்தாகப் பலியாகிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் ஒவொருவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் என்றும் கிருமி காற்றில் பரவுகிறது என்றும் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரிப்பதன் அர்த்தம் என்ன? அதுவும் கிருமி உருவான நாடென்று சொல்லப்படுகின்ற சீனாவில் நோய்த்தொற்றுத் தணிந்து மற்ற நாடுகளில் அசுர வேகத்தில் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு இத்தகைய அலட்சியம் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுவதில் என்ன தப்பு?

3) மிகவும் படுமோசமான நிலையில் உள்ள உலக நாடுகள் கிருமித்தொற்று மற்றும் பாதிப்பு நிலைமைகளை மிகவும் தாமதமாகத் தான் உணர்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டன. மக்களும் எச்சரிக்கைகளை மதிக்காமல் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதும் தான் இம்மோசமான பாதிப்புகளுக்குக் காரணம்.

4) உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தகவல்களைப் பொருட்படுத்தாமல் அல்லது முடிவுகளுக்குக் காத்திராமல் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் மக்களையும் மக்களின் உயிர்களையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைவரையும் முகக்கவசம் அணியுமாறு இலவசமாக மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி துரிதமாக நடவடிக்கை எடுத்த சீனாவுக்கு மிக அருகில் உள்ள நாடான தாய்வான் (TAIWAN) இதுவரை 376 தோற்றாளர்களுடனும் 5 பேரின் மரணத்துடனும் விழிப்போடு செயற்பட்டது . இன்று அமெரிக்கா உட்பட பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளெல்லாம் முகக்கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காகவே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதேபோல வட கொரியாவும்(North Koriea) தனது எல்லைகளைத் துரிதமாக மூடி தன்னைப் பாதுகாத்துக்கொண்டது என்று சொல்லப்படுகிறது. இதேபோன்று ஏற்கனவே கடுமையான நோய்த்தொற்றையும் பேரழிவையும் கண்ட சில நாடுகள் சுதாரித்துக்கொண்டன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளும் சுதாரிப்புடன் செயற்பட்டன. கனடாவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டதை மறுக்கமுடியாது.

5) எல்லைகளை மூடுதல் நாடுகளுக்குள் நுழைந்தவர்களைத் தனிமைப்படுத்தல் போன்ற விடயங்களில் பல்வேறு நாடுகள் மெத்தனமாகவும் போதிய எச்சரிக்கையின்மையுடனும் நடந்து கொண்டன என்பது மறுக்கமுடியாதது. சம்பந்தப்பட் ட மக்களும் எச்சரிக்கைகளை மீறி நடந்துள்ளனர். அரசாங்கங்களும் இலங்கை, இந்தியா , சிங்கப்பூர் போன்று ஊரடங்கை அமூல்ப்படுத்தி நிலைமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்.

6) காலங்கடந்தாவது எஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்ற முழுமூச்சுடன் அரசுகளும் மக்களும் செயல்பட்டாலன்றி, நிலைமை கட்டுமீறிய அவலத்தில் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற முடியாது. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றவும் முயலவேண்டும். மனித குலத்தை மீறிய ஒரு சக்தி , ஆளுமை என்பன தோன்றி உலகையும் உலகமக்களையும் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.