அணு ஆயுதப் போரைவிட கொடிய போராக உலகை அச்சுறுத்தும் 'கொரோனா ' யுத்தம் :

உலகம் . March, 29 2020

news-details

அணு ஆயுதப் போரைவிட கொடிய போராக உலகை அச்சுறுத்தும் 'கொரோனா ' யுத்தம் :
எல்லாவற்றிலும் முதலாவதாக முன்னிற்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் பரவலிலிலும் முதலிடத்தில் :

இதுவரை இருபத்தாறாயிரம் (2600) பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்டும் ஐந்து லட்சத்திற்கு(500,000) மேற்பட்டவர்களைப் பீடித்தும் உலகில் 175 ற்கு மேற்பட்ட நாடுகளை மீள வழிதெரியாத பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது கொரானா என்னும் கண்ணுக்குத் நுண்கிருமி. அறிவியல்-விஞ்ஞரன-தொழிநுட்ப வல்லமை படைத்த நாடுகளையும் வல்லமை படைத்தவர்களை ஆட்டிப்படைக்கும் இந்த நுண்கிருமி அணுஆயுதப் போரைவிடக் கொடியதாக இருக்கிறது.

வல்லரசு ஆதிக்கம் கொண்ட அமெரிக்காவையும் அமெரிக்காவிற்கு சவாலாக வல்லாதிக்க ஆளுமை கொண்ட நாடுகளையே உலுக்கும் இந்தக் கொடிய கொரானா வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று எந்த நாட் டையும் விட்டுவைக்கவில்லை. அறிவியல்-விஞ்ஞரன-தொழிநுட்பமெல்லாம் கைவிட்ட நிலையில் அந்த திறமைகளைக் கொண்டு மார்தட்டிய நாடுகளைக் கூட கதிகலங்க வைத்துள்ளது இந்தக் கொரானா. தங்கள் மக்களைப் பாதுகாக்கவோ பலியாவதில் இருந்து தடுக்கவோ முடியாது திணறுகின்றன,

அமெரிக்காவை உலகத்தில் முதலாவது இடத்தில் வைப்பேன் என்ற உறுதியுடன் ஆட்சிப்பீடம் ஏறிய அதிபரே இன்று என்ன செய்வதென்று குழம்பிய நிலையில், கொரோனா கிருமி தொற்றிய உலக நாடுகளில் அமெரிக்காவே இன்று முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாடுகள் இந்தக் கிருமி பற்றிய எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்த போதும் எந்த மருந்தையும் கண்டுபிடிக்கத் திராணியற்று விட் டன.

தம்முடைய படை பலத்தாலோ பண பலத்தாலோ எந்த உயிரையும் பாதுகாக்கவோ மரண அபாயத்திலிருந்து காப்பாற்றவோ முடியவில்லை. நோய் வாய்ப்பட்டவர்களின் மனோபலமும் ஆன்ம பலமும் தான் அவர்களைக் காப்பாற்றியுள்ளது என்றே எண்ண வேண்டியுள்ளது. ஏற்கனவே வயது முதிர்வினால் மற்றும் நோய்களால் அவதிப்படுவோரும், மேலும் பலவீனமும் பலவித நோய்களின் உபாதை உள்ளவர்களும் இந்நோயால் பீடிக்கப்பட்டு மடிகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.