அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் -136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

உலகம் . May, 04 2019

news-details

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட போயிங் 737 விமானம் புறப்பட வேண்டி, ஓடுதளத்தில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகே உள்ள செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
இந்த விமானத்தில் பயணிகளுக்கு சேதம் இல்லாதபோதும் விமானத்தின் இயக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதற்கான பணிகளில் பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.