ஜெனிவாவில் இலங்கைக்கு தற்காலிக வெற்றி மட்டுமே! சிவாஜிலிங்கம்

இலங்கை . April, 01 2019

news-details

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசுக்கு தற்காலிக வெற்றி மட்டுமே கிடைத்துள்ளதாக வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ், ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது.

எனினும் இறுதியில் நாமே வெற்றியடைவோம். இந்த விடயம் அரசிற்கும் தெரியும் எனினும் அவர்கள் காலத்தை இழுத்தடிப்பு செய்கின்றனர். இதேவேளை, மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து புனிதமாகவும் அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.