வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க தூதுவர்!!

இலங்கை . March, 09 2019

news-details

வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றம், தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம் போன்ற சில அமைச்சுக்கள், மக்களின் காணிகளை அபகரித்தல், பௌத்தமயமாக்கல் ஆகியவை குறித்து அலெய்னா பி ரெப்லிட்ஸ் கவனத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “யாழில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு வந்தமைக்கு ஊடகவியலாளர்களுக்கு மிக்க நன்றி.
அந்தவகையில் தனது யாழ் விஜயத்தின் போது அவதானித்துள்ள விடயங்களுடன் இணைத்து இந்த விடயங்கள் குறித்தும் இலங்கை அரசுடன் பேசுவேன்.
மேலும், இப்பிரச்சினைகளுக்கு முன்வைக்கவேண்டிய நடவடிக்கை குறித்து உரிய சந்தர்ப்பத்தில் கலந்துரையாடுவேன்” என அலெய்னா பி ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.