‘ தமிழ் மக்கள் இணையம்’ - கொழும்பில் புதிய அரசியல் கட்சி உதயம்

இலங்கை . February, 24 2019

news-details

‘ தமிழ் மக்கள் இணையம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (24) உதயமானது.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைந்தே புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளனர்.

தலைவராக மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனும், பொதுச்செயலாளராக முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையப்படுத்தியே கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எனினும், வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கபடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தலைவர் சண். குகவரதன் தெரிவித்தார்.