சிறீலங்கா சுதந்திரதினம்:ஈழத்தில் கரிநாள்!

இலங்கை . February, 04 2019

news-details

சிறீலங்காவின் 71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ் தேசமோ அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள்,காணி சுவீகரிப்பென் போராட்ட களங்களில் உள்ள மக்களுடன் இணைந்து அரசியல் கட்சிகள்,பல்கலைக்கழக மாணவ சமூகம் மற்றும் மதத்தலைவர்கள்.பொது அமைப்பு பிரதிநிதிகளென இணைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்னதாக குவிந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் கூட்டணி,ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகளது தலைவர்களும் வீதிகளிற்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வீதிக்கு இறங்கி மக்கள் போராட்டத்தில் முதன்முதலாக இன்று ஈடுபட்டடிருந்தார்.
குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகமும் கிளிநொச்சி போராட்டகளத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.