வடக்கில் விடுதலைப் புலிகள் மீளெழுச்சி ?

இலங்கை . January, 28 2019

news-details

வடமாகாணத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறுவதற்கான சாத் தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உ றுப்பினா் றோஹித அபேகுணவா்த்தன கூறியுள்ளாா்.

இன்று அக்கட்சியின் தலமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கல ந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் அவா் கூறியுள்ளதாவது.

வடக்கில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றது. கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் தீவிரவாத செயற்பாடுகள் தோன்றுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வன்முறை சம்பவங்களின் பொழுது ஐக்கிய தேசிய பல விடயங்களை தமக்கு சாதகமாக நிறைவேற்றிக் கொண்டது எனவும் கூறியுள்ளாா்.