இலங்கையில் வெள்ளம், மண் சரிவு; 6 பேர் பலி

இலங்கை . June, 07 2021

news-details

இலங்கையில் வெள்ளம், மண் சரிவு; 6 பேர் பலி


iTamilWorld: 7/6/2021:  திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றம் மழை  வெள்ளம் காரணமாக இலங்கையில்6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடரில் ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த இயற்கை சீற்றம் காரணமாக 45,380 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்ஷத்து 83 ஆயிரத்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வானிலை மாற்றத்தினால் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, புத்தளம்,கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தினபுரியில் மண்மேடொன்று சரிந்து மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..