இலங்கையின் தலைநகர் கொழும்பு துறைமுகம் அருகே கப்பலொன்றில் பாரிய வெடிப்பு ; பயங்கர சம்பவம்

இலங்கை . May, 27 2021

news-details

iTamilWorld: 26/5/2021: இலங்கையின் தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பர்ல் (X-PRESS PEARL) கப்பலில் கடந்த 19ம் திகதி தீ பரவி அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் நேற்று காலை பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் விழுந்து சிதறியுள்ளன. தீயை அணைப்பதற்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்ரர் பயன்படுத்தப்பட்டது.

இச்சம்பத்தைத் தொடர்ந்து 25 பேர் கடற்படையினரால் மீட்டுள்ளனர். இவர்களில் 2 இந்தியப் பிரசைகள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .