இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம்; கோவிட்-19 பரவல் அதிகரிப்பதால் அபாயம்; அமெரிக்காவின் பயண எச்சரிக்கை:

இலங்கை . May, 27 2021

news-details

Tamilworld: 26/5/2021: இலங்கையில் தீவிரமாகப் பரவும் கொரோனா காரணமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அங்கு தீவிர பயங்கரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய சூழ்நிலை விடயங்களில் கவனமாக இருக்குமாறு , இலங்கைக்குச் செல்லமுன் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கப்படுள்ளது . இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்தப் பயண எச்சரிக்கை அமெரிக்கர்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது.

எவ்விதமான எச்சரிக்கையும் இல்லாமல் இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தைகள், வியாபாரக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்கள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அமெரிக்கா தூதரக பயண அறிவுறுத்தலில் தெரிவிக்கப்படுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.