இலங்கையிலும் கொரோனாத் தொற்று அதிகரிப்பு: நாட்டின் சில பிரதேசங்கள் இரவு 8 மணியிலிருந்து தனிமைப் படுத்தப்படுகின்றன.

இலங்கை . April, 27 2021

news-details

இலங்கையிலும் கொரோனாத் தொற்று அதிகரிப்பு: நாட்டின் சில பிரதேசங்கள் இரவு 8 மணியிலிருந்து தனிமைப் படுத்தப்படுகின்றன.

iTamilworld: 26/4/2021:  இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்றுகளின்  அதிகரிப்பைத் தொடர்ந்து நாட்டின் சில பிரதேசங்கள் இன்று இரவு 8 மணிமுதல் தனிமைப் படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதிக தொற்றுகளைக் கொண்டுள்ள பகுதிகளான கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகள், மினுவான்கொடை பிரதேசத்தின் சில பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள், தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் திருகோணமலை மாவட்ட சில பகுதிகளும் தனிமைப் படுத்தப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.