இலங்கை அரசினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.

இலங்கை . April, 26 2021

news-details

இலங்கை அரசினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.

iTamilWorld: 14/4/2021: 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் இலங்கை அரசினால் வெளியிட்டுள்ளது. அவையாவன: 1) ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2.) சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3) சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4) அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) 5) ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) 6) தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா 7) சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8.) இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9) அல்கய்தா அமைப்பு 10) சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11) சுப்பர் முஸ்லிம் அமைப்பு என்பனவாகும்.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதி சட்ட மா அதிபரினால் கடந்த வாரம் வழங்கப்படிருந்த நிலையிலேயே, அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்படுள்ளது .

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.