12 ஆண்டுகள் கடந்த பிறகும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ நா மனித உரிமை மையத்தில் தீர்மானம்.

இலங்கை . February, 26 2021

news-details

12 ஆண்டுகள் கடந்த பிறகும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ நா மனித உரிமை மையத்தில் தீர்மானம்.

iTamilWorld: 24/2/2021:
இலங்கையில் உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த பின்னும் போர் நடைபெற்ற காலத்திலும் இன்றும் தொடர்ந்து இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன என்ற குற்றசாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமை மையத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது . இந்தத் தீர்மான முடிவு ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 46வது மனித உரிமைகள் மன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் 23/2/2021 புதன்கிழமை அன்று காணொளி வாயிலாக தனது அறிக்கைத் தீர்மானத்தை விளக்கினார் ஐ நா மனித உரிமை உயர் ஆணையர் மீஷெல் பேசலேட் அவர்கள். அந்த அறிக்கையில் 12 வருடங்கள் கடந்த பின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை; நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தவில்லை. 2015 இல் மனித உரிமைகள் நடக்காதவாறு பார்த்துக்கொள்வதாக உறுதி கூறிய இலங்கை அரசு அதனை மீறிவிட்டது என்றார் அவர்.