இலங்கையின் முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறை; 40 லட்ஷத்தை மேசையில் பரப்பி பரபரப்பேற்படுத்தியவர்; நீதித்துறையைப் பழித்தவர்

இலங்கை . January, 14 2021

news-details

இலங்கையின் முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறை; 40 லட்ஷத்தை மேசையில் பரப்பி பரபரப்பேற்படுத்தியவர்; நீதித்துறையைப் பழித்தவர்

iTamilWorld: 13/1/2021: இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இலங்கையின் உச்ச நீதிமன்றம் 12/1/2021 அன்று 4 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்துள்ளது. இவர் நாடாளுமன்றத்தின் எதிர்க்கடசி நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இத்தீர்ப்பையடுத்து இவர் தனது நாடாளுமன்றப் பதவியை இழக்கும் வாய்ப்புள்ளது. இவர் சிங்கள திரைப்பட நடிகருமாவார். அண்மையில் இவர் மேசையில் 40 லட்ஷம் ரூபாயை பரப்பி வைத்து மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2017 ஆண்டு இலங்கையின் நீதித்துறையையும் சட்டத்தரணிகளையும் அவமதித்துப் பேசினார். அதற்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலேயே இவருக்கு மேற்படி தண்டனை வழங்கப்பட்டது .