இலங்கை . January, 03 2021
இலங்கையில் மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் முயற்சியில் சிங்கள அரசியல் தலைமைகள்.
iTamilWorld: 3/1/2021: 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை மூலம் ஏற்படுத்தப்பட்ட தீர்வு இன்றைய சிங்கள அரசியல் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான முயற்சிகளில் அரசியல் வியூகம் வகுக்கப்படுகிறது. ஏற்ககனவே இலங்கை அரச தலைவரான கோத்தபாய ஒரேநாடு ஒரேசட்டம் என்று பேசிவருகின்றார். அதேநேரத்தில், இலங்கையில் தமிழ்மக்களுக்கு என்று எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லிவருகின்றனர் சிங்கள அரசியல்வாதிகள். மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சி என்பது தீயுடன் விளையாடும் செயல் போன்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கடசியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 13வது திருத்தம் என்பது இலகுவாக செய்யக்கூடிய விடயமில்லை. ஏனென்றால் இந்திய அரசு இந்தத் தீர்வுத் திட்டத்தில் முக்கிய பங்காளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.