இலங்கை சிறையில் துப்பாக்கிசூட்டுக்கு எட்டுப் பேர் பலி.பத்துப் பேர் நிலை கவலைக்கிடம். எழுபத்தொரு பேர் காயம்,

இலங்கை . December, 02 2020

news-details

இலங்கை சிறையில் துப்பாக்கிசூட்டுக்கு எட்டுப் பேர் பலி.பத்துப் பேர் நிலை கவலைக்கிடம். எழுபத்தொரு பேர் காயம்,

iTamilWorld: 1/12/2020:
இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் உள்ள மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் இதுவரை எட்டுபேர் பலியாகியுள்ளனர். இச் சிறைச்சாலையில் கொரோனாத் தோற்றாளர்கள் அதிகரித்துக் கொண்டிப்பதைக் காரணமாக வைத்து சில கைதிகள் சிறைச்சாலையை விட்டுத் தப்பியோட முயன்றனர். இதனைத் தடுப்பதற்காக பாதுகாப்புத் துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதே நேரத்தில் தப்பியோடிய விஷமிகள் சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அத் தீயோ கடடுகடங்காமல் கொழுந்து விட்டெரிந்தது .
இசம்பவங்களால் பலியாகிய எட்டுப் பேர் பலியாகியதுடன் பத்துப் பேர் கடுங்காயங்களுடன் உயுருக்குப் போராடி வருகின்றனர். மேலும் எழுபத்தொரு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.