இலங்கை . November, 20 2020
பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இலங்கை அரசின் 2021 இற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல்.
TamilWorld:19/11/2020:
இலங்கை அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையான வரவு செலவுத் திட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 17ம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் பிரதமரின் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சில முக்கிய முவுகளை அறிவித்தார். அவற்றுள் , நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக வழங்கபடவேண்டும் என்றும், பால் மாவுக்குப் பதிலாக பாலின் உற்பத்தியை அதிகரிக்க 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமான தொகை வழங்கப்படும் என்றும், சுகாதாரத் துறைக்கு மேலதிகமான செலவுக்காக 18,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், போதைப்பொருள் , கடல்வளம், இராணுவம், விமானப்படை ஆகியவற்றின் அபிவிருத்திக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் தொழில்நுட்பத் தேவைகளை அபிவிருத்தி செய்ய 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியதுடன் அதற்கான திட்டம் வகுக்கப்படுள்ளது என்றும், மோட்டார் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்களையும் வாகன உதிரிபாகங்களுக்கான வரித்தொகைகளையும் குறைப்பதென்றும், துறைமுகங்கள், விமான நிலையங்களை சர்வதேச வியாபார மையங்களாக மாற்றும் திட்டங்களை முன்வைக்கப்படுகிறது என்றும், வங்கிகளின் நடைமுறை சட்டங்களில் மறுசீரமைப்பு செய்யும் திட்டங்கள் உள்ளன என்றும், இஞ்சி மற்றும் மஞ்சள் என்பவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.