இலங்கையில் கொரோனா வைரஸ் 2வது அலை அதிக வீரியத்துடன் பரவுகிறது.

இலங்கை . November, 14 2020

news-details

இலங்கையில் கொரோனா வைரஸ் 2வது அலை அதிக வீரியத்துடன் பரவுகிறது.

iTamilWorld: 14/11/2020: கொரோனாத் தொற்றுகள் பரவத் தொடங்கிய காலத்திலிருந்து அதிக கட்டுப்பாடுகளை விதித்து அது பரவுவதை தடுப்பதற்கு இலங்கை அரசு போதிய நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது 2வது அலைக்கு முன்புவரை 13 மக்களே பலியான நிலையில் 1000 கணக்கில் தொற்றுகள் பதிவாகியிருந்தன. தற்போது 53 பலிகளும் 16,000 தொற்றுகளும் பதிவாகியுள்ளன. இத்தொற்றுகள் ஐரோப்பாவில் நிலவும் தொற்றுகளை ஒத்ததாக உள்ளதாக இலங்கைப் பல்கலைக்கழகதினால் நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
தற்போது இந்த நிலை எப்படி எங்கிருந்து என்று தெரியாதவகையில் கொரோனா வைரஸ் தோற்றாளர்கள் அதிகரித்த வண்ணமுள்ளனர் . கடந்த ஒக்டோபர் 3ம் திகதியிலிருந்து இந்த கொரோனாத் தொற்றுகள் சமூகப் பரவலாக மாறியுள்ளது.