இலங்கை . October, 30 2020
வல்லரசுகளின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் இலங்கை. எதிர்காலம் என்னவாகும்?
இலங்கையில் 2009 இல் போர் ஓய்ந்தததின் பின் அப்போரை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசுக்கு பிரதான உதவிகளை செய்த அயல் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இலங்கைத் தீவை தமது வல்லாதிக்க சக்திக்குள் கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவுக்கு கைகொடுக்கும் தோழனாக அமெரிக்கா செயல்பட்டு வருகின்றது. சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுகொண்டு இலங்கைக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். இதே நேரத்தில் ஐரோப்பியன் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் தங்கள் பங்குக்கு இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பம்பியோ இலங்கையில் காலடி வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்க நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய இராஜதந்திர முயற்சி இலங்கையின் எதிர்காலத்தை என்ன நிலைக்குக் கொண்டுவந்துவிடும் என்பது புரியாத புதிராகவுள்ளது.