இலங்கையைத் தனது பிடியில் வைத்திருக்க சீனா செய்யும் தந்திரம்.

இலங்கை . October, 12 2020

news-details

இலங்கையைத் தனது பிடியில் வைத்திருக்க சீனா செய்யும் தந்திரம்.

அண்மையில் காணொளி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்ட பொது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையில் இலங்கைக்கு 16.5 பில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்க இருப்பதாக சீன தூதரகம் ஒரு அறிக்கையினுடாக அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மிக வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் சீன உயர்மட்ட தூதுக்குழுவினர் 8/10/2020 அன்று அவசரமாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினைகளும் போர்ப்பதடங்களும் நிலவும் சூழ்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை இலங்கையை தன்வசம் வைத்திருப்பதற்கான ஒரு இராஜதந்திர முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.