இலங்கை . August, 14 2020
இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம்.
இலங்கையில் 9வது பாராளுமன்றத்திற்கான அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் நடைபெற்றது. கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் அமைச்சரவை அந்தஸ்து உள்ள 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை 8ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.